ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்ப தயாராகும் அமேஷான் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் மிகப்பெரிய மின் வர்த்தக சேவை வழங்குனராக அமேஷான் நிறுவனம் விளங்குகின்றது.

இந்த நிறுவனம் புதிதாக விண்வெளி திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இத் திட்டத்தின் ஊடாக 3,236 செயற்கைக் கோள்களை விண்ணிற்கு ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அதி வேகம் கொண்ட புரோட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதற்காக இத் திட்டம் அமல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகெங்கிலும் மக்கள் பரந்து வாழும் 95 சதவீதமான பிரசேத்திற்கு இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இத் திட்டம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers