மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பாலியல் தொந்தரவு: விசாரணை செய்ய தயாராகியது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுத்தப்பட்டதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இப்படியான நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திலும் பாலியல் தொந்தரவு காணப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு பணிபுரியும் சில பெண் ஊழியர்கள் தமக்குள் மின்னஞ்சல் ஊடாக இந்த தகவல்களை பரிமாறியுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த விடயம் பூதாகரமாக மாறியுள்ளது.

எனவே இப்பிரச்சினை தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது தயாராகிவருகின்றது.

விண்டோஸ் இயங்குதளம் மற்றும் Xbox ஹேம் சாதனம் வடிவமைப்புக்களில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு பாலியல் தொந்தரவுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்