இந்தியாவில் 5G தொழில்நுட்பம்: ஹுவாவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

விரைவில் அனேகமான நாடுகளில் ஐந்தாம் தலைமுறை மொபைல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்தியாவில் இத் தொழில்நுட்பம் எவ்வாறு இருக்கும் என புதிய தகவல் ஒன்றினை ஹுவாவி நிறுவனத்தின் தலைவர் James Wu வெளியிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த 10 வருடங்களில் இந்தியா 5G தொழில்நுட்பத்தை கொண்ட சந்தைவாய்ப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஓர் மொபைல் நிறுவத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டமை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை தென்னாசியாவில் ஹொங் ஹொங் நாட்டில்தான் முதன் முறையாக 5G தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து தாய்லாந்து, இந்தியா மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்