யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

யூடியூப் நிறுவனமானது தனது தளத்தில் சொந்தமாக வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கும் விளம்பரம் ஊடாக பணம் சம்பாதிக்கும் வசதியையும் வழங்கி வருகின்றது.

எனினும் சில வகையான வீடியோக்களுக்கு விளம்பரம் தரப்படுவதில்லை.

இவ்வாறே தற்போது நோய் எதிர்ப்பு மாத்திரைகள் அல்லது மருத்துவதற்கு எதிராக வீடியோக்களை தரவேற்றம் செய்யும் யூடியூப் சனல்களுக்கு தரப்படும் விளம்பரங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

BuzzFeed எனும் பிரபலமான பொழுதுபோக்கு இணையத்தளமானது யூடியூப் உடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாகவே இந்த நடிவடிக்கையை யூடியூப் எடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பான விபரத்தினை தமது கொள்கைகளுக்குள் (Policies) உள்ளடக்கவுள்ளதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்