ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னேறப்போகும் ஹுவாவி நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு இடையிலேயே அதிக போட்டி நிலவி வந்தது.

இப்படியிருக்கையில் கடந்த வருடம் எதிர்பாராத வகையில் ஹுவாவி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது.

எனினும் சாம்சுங் நிறுவனம் தொடர்ந்தும் முன்னிலையில் இருந்துவருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் சாம்சுங் நிறுவனத்தையும் பின்னுக்கு தள்ளி முதலாம் இடத்தினை ஹுவாவி பிடிக்கும் என அதன் CEO ஆன Richard Yu தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 200 மில்லியனிற்கும் அதிகமாக கைப்பேசிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என தனக்கு தானே இலக்கு நிர்ணயித்த ஹுவாவி நிறுவனம் அதனை சாதித்தும் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers