பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு!

Report Print Kabilan in நிறுவனம்

சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக ஷென்சென் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோனி நிறுவனம், 2013ஆம் ஆண்டு முதல் சரிவை சந்திக்க தொடங்கியது. இந்நிறுவனத்தின் கடன் தொகை சென்ற ஆண்டு டிசம்பர் தொடங்கி, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 20.2 பில்லியன் யுவான்கள் (அதாவது 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷென்சென் நகர நீதிமன்றத்தில் ஜியோனி நிறுவனத்தின் தலைவர் லியு லிரோங் மீது புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் லியு லிரோங் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஆயிரம் கோடியை இழந்துவிட்டதாகவும், எனவே அவரது நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பான மனுவை விசாரித்த ஷென்சென் நீதிமன்றம், ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக தற்போது அறிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜியோனி நிறுவன தலைவர் லியு லிரோங் கூறுகையில், ‘சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தது உண்மை. ஆனால் நிறுவனத்தின் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தவில்லை.

மேலும், சூதாட்டத்தில் 144 மில்லியன் டொலர்களை மட்டுமே இழந்தேன். ஜியோனி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 290 கோடி டொலர்களை 648 சிறு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்க வேண்டி இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்திற்கு கடந்த 2013 முதல் 2015க்குள் மட்டும் சுமார் 1.44 கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers