பயனர்களுக்காக வழங்கிய விசேட வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் Apple Music எனும் பாடல்களை ஒன்லைனில் கேட்டு மகிழும் தளம் ஒன்றினை இயக்கி வருகின்றமை தெரிந்ததே.

இத் தளத்தில் கலைஞர்கள் தமது சொந்த படைப்புக்களை பதிவேற்றம் செய்வதற்காக Apple Music Connect எனும் சேவையை வழங்கி வந்தது.

இச் சேவையின் ஊடாக கலைஞர்கள் தமக்கான பிரத்தியேக பக்கம் ஒன்றினை உருவாக்கி தமது படைப்புக்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

இவ் வசதி பலத்த வரவேற்பை பெற்றிருந்தபோதிலும் ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நிறுத்தவுள்ளது.

ஆப்பிள் நிறுவனமே இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும் இதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

இம் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து புதிய படைப்புக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.

எனினும் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி வரையில் இதுவரை தரவேற்றம் செய்யப்பட்ட படைப்புக்களை தேடி பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் பின்னர் அனைத்து தகவல்களும் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers