தனது பிரபல சேவையினை அதிரடியாக நிறுத்துகின்றது கூகுள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பல்வேறு இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் Hangouts எனப்படும் சட்டிங் சேவையினையும் வழங்கிவருகின்றது.

எனினும் இச் சேவையினை 2020 ஆம் ஆண்டுடன் நிறுத்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலாக வேறு தொடர்பாடல் சேவையினை அறிமுகம் செய்வதற்கு கூகுள் முயற்சித்து வருவதே இவ்வாறு Hangouts நிறுத்தப்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் Hangouts சேவையில் இரு புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு நிலமையிலேயே கூகுள் நிறுவன் இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

இதற்கு பதிலாக ஆப்பிளின் iMessage போன்றதொரு சேவை கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers