மற்றுமொரு சிக்கலில் கூகுள் நிறுவனம்: அபராதமாக செலுத்த நேரிடலாம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக சிவில் வழக்கு ஒன்று கையில் எடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் தேடலின்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் ரஷ்யாவின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை என்றதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூகுள் நிறுவனம் 10,450 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி தீர்மானம் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இணையத் தேடல்கள் மற்றும் இணையத் தேடல் முடிவுகளை அழிப்பது தொடர்பான சட்டத்தினை கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே ரஷ்யா அறிமுகம் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers