நீண்ட காலம் பணியாற்றிய நிர்வாகி வாட்ஸ் ஆப் நிறுவனத்திலிருந்து விலகினார்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் துணை நிறுவுனரான ப்ரைன் அக்ரொன் அந்நிறுவனத்திலிருந்து பதவி விலகிய ஒரு வருட காலப் பகுதியில் மற்றுமொரு நீண்டகால பணியாளர் பதவி விலகியுள்ளார்.

இந்திரான நீராஜ் அரோரா என்பவரே இவ்வாறு தற்போது பதவி விலகியுள்ளார்.

இவர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் நீண்ட காலம் தலைமை வியாபார அலுவலகராக பணியாற்றியிருந்தார்.

எனினும் தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட விரும்புவதாக தெரிவித்து தற்போது பதவி விலகியுள்ளார்.

முன்னர் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியிருந்த இவர் 2011 ஆம் ஆண்டளவில் வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.

2014 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனமானது 19 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாட்ஸ் ஆப்பினை கொள்வனவு செய்த பின்னரும் தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...