நிலவிற்கு மனிதனை அனுப்பும் நிறுவனருக்கு 40 மில்லியன் அபராதம்! நீதிமன்றம் உத்தரவு

Report Print Kabilan in நிறுவனம்

தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியதாக, டெஸ்லா நிறுவனத்திற்கு 40 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது டெஸ்லா கார் நிறுவனம். இந்நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி, வடிவமைப்பு, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிறுவனத்தின் தலைவராக எலன் மஸ்க் உள்ளார். இவரது மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நிலவிற்கு மனிதனை அனுப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையில், டெஸ்லா நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக் கொள்ள போவதாக அதன் தலைவர் எலன் மஸ்க், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், பங்குதாரர்களிடமிருந்து அனைத்து பங்குகளையும் தானே திரும்பப் பெற்றுக் கொண்டு நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், முதலீட்டாளர்கள் ஒன்று நிறுவனத்திலேயே தொடரலாம் அல்லது ஒரு பங்குக்கு தலா 420 டொலர்களை பெற்றுக்கொண்டு விற்றுவிடலாம் என்றும் அறிவித்திருந்தார்.

எலன் மஸ்க்கின் இந்த முடிவு, அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, இந்த முடிவிற்கு எதிர்மறையான கருத்துக்களை சந்தித்ததால், தனது டெஸ்லா நிறுவனத்தின் தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய எலன் மஸ்க், நிறுவனத்தை முழுவதுமாக வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

இதன் காரணமாக, எலன் மஸ்க் மீது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் வழக்கு தொடர்ந்தது. அதில் தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்கள் என்னென்ன என்பதை தெரிவிக்காமல், எலன் மஸ்க் பங்குகளை திரும்ப வாங்குவதாக வெளியிட்ட அறிவிப்பால்

பங்கு சந்தையில் குழப்பம் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், எலன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நிறுவனத்தின் தலைவராக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் அடுத்த 45 நாட்களுக்குள், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மஸ்க் விலக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், மஸ்க் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எலன் மஸ்க் டெஸ்லாவின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...