ஒரு பில்லியன் டொலர் செலவு செய்யும் பேஸ்புக் நிறுவனம்: ஆசியாவில் ஏற்படப் போகும் மாற்றம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆசிப் பிராந்தியத்திற்கான சேவையகக் கணணிகள் (Server Computers) அனேகமாக சிங்கப்பூரை தளமாகக் கொண்டே உருவாக்கப்படும்.

இதன் வரிசையில் அண்மையில் கூகுள் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள தனது சேவையக நிலையத்தினை 850 மில்லியன் டொலர்கள் செலவு செய்து விஸ்தரித்தது.

இதனைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமும் ஆசிய பிராந்தியத்திற்கான சேவையக நிலையம் ஒன்றினை சிங்கப்பூரில் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்யவுள்ளது.

மேலும் இதனை உருவாக்கும் பணிகளை 2022 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

தவிர 170,000 சதுர மீற்றர்களில் இச் சேவையக நிலையம் உருவாக்கப்படவுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers