ஈரானுடன் தொடர்புடைய 58 கணக்குகளை முடக்கியது கூகுள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கூகுள் நிறுவனமானது அண்மையில் சுமார் 58 கணக்குகளை நிரந்தரமாக முடக்கியுள்ளது.

இவை அனைத்தும் ஈரானுடன் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்டிருந்தவையாகும்.

இவற்றுள் 39 யூடியூப் சேனல்களும், 6 ப்ளாக்கர்களும், 13 கூகுள் பிளஸ் கணக்குகளும் அடங்கும்.

யூடியூப் சேனல்களில் உள்ள வீடியோக்கள் அமெரிக்காவில் இருந்து 13,466 தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தது.

இக் கணக்குகள் அனைத்தும் ஈரான் குடியரசின் இஸ்லாமிய ஒளிபரப்பிற்கு சொந்தமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் தொடர்புடைய மேற்கண்ட சேவைகளின் கொள்கைகளை மீறியதனாலேயே இவ்வாறு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers