உலகிலேயே ஆயிரம் பில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம்! வரலாற்று சாதனை படைத்த ஆப்பிள்

Report Print Kabilan in நிறுவனம்
214Shares
214Shares
ibctamil.com

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததன் மூலம் ஆயிரம் பில்லியன் டொலர் (ஒரு லட்சம் கோடி டொலர்) எனும் மதிப்பை எட்டி, உலகிலேயே பெரும் மதிப்பை பெற்ற நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் திவாலாகும் நிலையில் இருந்து இந்நிறுவனத்தை, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஐபோன், ஐபேட் ஆகிய Gadget-களுக்கு கிடைத்த வரவேற்பால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பல மடங்கு உயர்ந்தன.

இந்நிலையில், சமீபத்தில் 207.05 டொலர்கள் என ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தபோது, அந்நிறுவனத்தின் மதிப்பு 1000 பில்லியன் டொலர்களை எட்டியது.

இதன்மூலம், உலகிலேயே ஆயிரம் பில்லியன் டொலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்