அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு தெரிவான சென்னை பெண்

Report Print Kabilan in நிறுவனம்
60Shares
60Shares
ibctamil.com

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா எனும் சென்னை பெண் பதவி ஏற்க உள்ளார்.

சென்னையில் பிறந்த திவ்யா சூர்யதேவரா (39) எனும் பெண், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிதி பிரிவில் துணை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சென்னை பல்கலைக்கழகத்தில், வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை முடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் MBA படித்த திவ்யா, கடந்த 2005ஆம் ஆண்டில் டெட்ராய்ட் நகரில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

அதன் பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டில் துணை நிதி தலைவராக பதவி உயர்த்தப்பட்டார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்து சக் ஸ்டீவன்ஸ் என்பவர் ஓய்வு பெற உள்ள நிலையில், திவ்யா அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம், உலகின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பதவி ஏற்க உள்ள முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருக்கும் முதல் பெண் மேரி பேர்ரா(56) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்