ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ: காரணம் என்ன?

Report Print Kabilan in நிறுவனம்
23Shares
23Shares
lankasrimarket.com

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் ஏர்டெல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் Series-3 சாதனத்தை மே 11ஆம் திகதி முதல் விற்பனை செய்து வருகின்றன.

ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர், ஒரே சிம் கார்டு கொண்டு ஐபோன் மற்றும் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் வாட்ச் Series-3 சாதனத்தில் E-Sim வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் Series-3 சாதனங்களுக்கு வழங்கும் சில சேவைகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் ஏர்டெல் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறுகையில், ‘ஆப்பிள் வாட்ச் Series-3 சேவை ஏர்டெல் சார்பில் வழங்கப்பட்டு வருவதில் ஒருங்கிணைந்த உரிமத்தின் விதிகளை மீறும் வகையில் உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் வேண்டுமென்றே இந்திய எல்லைக்கு வெளியே Network-களை கட்டமைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக ஏர்டெல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்.

இது மட்டுமன்றி ஏர்டெல் உடனடியாக இந்த சேவையை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல் சார்பில் இந்தியாவில் E-Sim-களுக்கான Provision Note-களை Setup செய்யவில்லை எனவும் ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்