ஸ்னாப்சாட் நிறுவனத்தின் புதிய முயற்சி: பயனர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

மல்டிமீடியா குறுஞ்செய்திப் பரிமாற்ற சேவையினை வழங்கிவரும் ஸ்னாப்சாட் ஆனது மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பெருந்தொகை பயனர்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பர சேவையினை அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் எண்ணியுள்ளது.

இதன்படி முதன் முறையாக 6 செக்கன்கள் கொண்ட விளம்பரங்களை பரீட்சார்த்தமாக பிரசுரம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ் விளம்பரங்களை பயனர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும்.

விளம்பரத்தை தவிர்க்கும் வசதி (Skip) உள்ளடக்கப்பட்டிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் அசௌகரிங்களை எதிர்நோக்க நேரிடலாம்.

யூடியூப் போன்ற ஏனைய தளங்களில் விளம்பரங்களை தவிர்க்கும் வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers