ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்காவின் அட்டகாசம் தொடர்பில் மற்றுமொரு புள்ளிவிபரம் வெளியானது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பேஸ்புக் பயனர்களின் தகவல்களை அந்நிறுவனத்தின் அனுமதியின்றி ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் திரட்டியிருந்தமை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக குறித்த நிறுவனம் போஸ்புக் ஊடாக சில வினாக்களை வழங்கி அதற்கு விடையளிக்கச் செய்து தனிநபர் தகவல்களை திரட்டியும் உள்ளது.

நியூசிலாந்தில் 64,000 பயனர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் 10 பயனர்கள் மாத்திரமே குறித்த வினாக்களுக்கு விடையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 53 நாடுகளில் உள்ள பயனர்கள் குறித்த வினாக்களுக்கு விடையளித்து தமது தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் 311,127 பயனர்கள் ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்காவின் தகவல் திருட்டில் சிக்கியுள்ளனர்.

இதேவேளை உலகம் முழுவதும் 87 மில்லியன் பயனர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers