விரிவுபடுத்தப்படும் டுவிட்டரின் வசதி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
6Shares
6Shares
lankasrimarket.com

பல மில்லியன் வரையான பயனர்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் தனது வசதி ஒன்றினை விரிவுபடுத்தவுள்ளது.

பிரபலங்களின் உண்மையான கணக்கினை தெரிந்துகொள்வதற்கு அவர்களின் கணக்கு உறுதிப்படுத்தப்பட்டு நீல நிற சரி அடையாளம் காட்சிப்படுத்தப்படும்.

இவ் வசதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கி அரசியல்வாதிகள் உட்பட மேலும் பலருக்கு இவ்வாறான கணக்கினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நேரடி ஒளிபரப்பில் தோன்றிய டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jack Dorsey அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதற்கான புதிய முறைவழி தொடர்பில் டுவிட்டர் நிறுவனம் ஆராய்ந்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மேலும் பல போலியான கணக்குகள் தொடர்பில் பயனர்கள் அவதானமாக செயற்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்