உலகளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைத்த மற்றுமொரு கௌரவம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணினிச் சாதனங்கள் என இலத்திரனியல் சாதன உற்பத்தியில் புரட்சி செய்து வரும் நிறுவனமாக ஆப்பிள் விளங்குகின்றது.

இவ்வாறான நிலையில் உலகளவில் மற்றுமொரு கௌரவத்தினை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

அதாவது Fast Company ஆனது புதுமைகளைப் படைக்கும் முதல் 50 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் இப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நான்காவது இடமே கிடைக்கப்பெற்றிருந்தது.

மேலும் இப் பட்டியலில் Netflix, Square, Tencent, Amazon, Patagonia, CVS Health, The Washington Post, Spotify மற்றும் NBA ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers