கிரடிட் கார்ட் நிறுவனங்களின் அதிரடியால் மேலும் திணறும் பிட்காயின் பெறுமதி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
86Shares
86Shares
lankasrimarket.com

பல்வேறு நாடுகளில் பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பேஸ்புக், யூடியூப் போன்ற பிரபல இணைய நிறுவனங்களும் பிட்காயின் தொடர்பான விளம்பரங்களுக்கு தடைவிதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒன்லைன் ஊடாக பிட்காயின்களை கொள்வனவு செய்வதற்கு கிரடிட் கார்ட்களை பயன்படுத்துவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

பிரபலமான கிரடிட் கார்ட் நிறுவனங்கள் தமது கிரடிட் கார்ட்டினை பயன்படுத்தி பிட்காயினை கொள்வனவு செய்வற்கு தடைவிதித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

தற்போது பிரித்தானியாவை சேர்ந்த கிரடிட் கார்ட் நிறுவனங்களை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இதன் காரணமாக அடுத்துவரும் சில நாட்களில் பிட்காயினின் பெறுமதி மேலும் பல மடங்கு வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்