மன்னிப்பு கேட்ட ஆப்பிள் நிறுவனம்

Report Print Kabilan in நிறுவனம்

வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களை வாங்க தூண்டுவதற்காக பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வந்தது.

இந்நிலையில் தன் பழைய பதிப்பு ஐபோன்களின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்ததை, ஆப்பிள் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் ஒப்புக் கொண்டது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், ‘லித்தியம்-அயன் பேட்டரிகள், குளிர் நிலைகளில் குறைந்த அளவு Charge இருக்கும்போது சரிவர இயங்க இயலாமல், மின்னணு பாகங்களை காப்பதற்காக சாதனத்தின் இயக்கத்தையே நிறுத்திவிடுகிறது.

வாடிக்கையாளர்களுடைய சாதனங்களில் ஆயுளை நீட்டிக்க வேண்டுமென நினைப்பதால், சில பழைய ஐபோன்களின் இயக்க வேகத்தை குறைத்தோம் என தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐபோன் 6 அல்லது அதற்கு அடுத்தபதிப்பு ஐபோன்களை வாங்கியவர்களுக்கு, உத்தரவாத காலத்திற்கு பிறகான பேட்டரியின் விலையை, 79 டொலர்களில் இருந்து 29 டொலர்களாக குறைக்க உள்ளோம்.

ஆப்பிளை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை என்பது மிக முக்கியம். எனவே, அதை தொடர்ந்து பெறுவதற்கும், பராமரிப்பதற்குமான எங்களது செயற்பாட்டை என்றைக்கும் நிறுத்த மாட்டோம்’ என தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய பேட்டரிகளின் விலையை, 50 சதவிதம் குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்