அதிகளவு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ள நாடுகளின் பட்டியல் வெளியானது

Report Print Kavitha in நிறுவனம்

அடுத்த மூன்று மாதங்களில் அதிகளவு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ள நிறுவனங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான Manpower Group 43 நாடுகளை சேர்ந்த 59,000 நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, போலந்து, ருமேனியா ஆகிய நாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகளவு பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

அடுத்த மூன்று மாதங்களில் அதிகளவு பணியாளர்களை நியமிக்கவுள்ள நாடுகளில் தைவான்(25 சதவிகிதம்) முதலிடத்தையும், ஜப்பான்(24 சதவிகிதம்), இந்தியா(22 சதவிகிதம்) அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

சமீபகாலமாக இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளில் வேலைவாய்ப்பு சந்தையில் காணப்படும் நிலையற்ற தன்மை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்