கூகுளின் புதிய ஆய்வுகூடம்: எதற்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சிலிக்கன் வலியில் தனது பிரதான அலுவலகத்தினைக் கொண்டுள்ள கூகுள் கிளைகளை பல்வேறு நாடுகளிலும் நிறுவியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஆய்வுகூடம் ஒன்றினை சீனாவில் நிறுவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்கால உலகை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமே ஆளவுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளது.

கூகுளின் தேடுபொறி சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

எனினும் அங்கு 100 வரையான பணியாளர்கள் சர்வதேச சேவையை வழங்கிவருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே புதிய ஆய்வுகூடத்தை நிறுவும் முயற்சியில் கூகுள் இறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்