நேரடி வர்த்தகத்திலும் கால்பதிக்கிறது அலிபாபா

Report Print Fathima Fathima in நிறுவனம்

சீனாவை சேர்ந்த ஓன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா சமீபத்தில் சிங்கிள்டே தினத்தில் ஒரே நாளில் ரூ.1.67 லட்சம் கோடிக்கு விற்பனை செய்து உலக சாதனை படைத்தது.

இந்நிலையில் சீனாவில் நேரடியாக கடைகள் மூலம் பலசரக்கு உட்பட பொருட்கள் விற்பனையிலும் களமிறங்குகிறது.

இதற்காக சில்லரை வர்த்தக நிறுவனமான சன் ஆர்ட் ரீடைல் குழுமத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

ஓன்லைன் வர்த்தகத்துடன் நேரடி வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டே இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக அலிபாபாவின் சிஇஓ டேனியல் ஷாங் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்