பேஸ்புக் அறிமுகப்படுத்தும் இரண்டு சிறப்பம்சங்கள்!

Report Print Thayalan Thayalan in நிறுவனம்
பேஸ்புக் அறிமுகப்படுத்தும் இரண்டு சிறப்பம்சங்கள்!

பேஸ்புக் தளத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நியூஸ் ஃபீட் இரண்டு வெவ்வேறு பக்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக நாங்கள் பார்வையிடும் பக்கத்தை நியூஸ் ஃபீட் என்றும் தனிப்பட்ட நியூஸ் மற்றும் வணிக ரீதியிலான தகவல்களை பார்க்க எக்ஸ்புளோர் ஃபீட் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை, போலிவியா, ஸ்லோவேகியா, செர்பி, கௌதமாலா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இவ்வாறு பிரிக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆறு நாடுகளிலும் தற்சமயம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்புளோர் ஃபீட்டில் வணிக ரீதியிலான விளம்பரங்களுடன் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து பின்தொடரும் நட்சத்திரங்களின் போஸ்ட்களை பார்க்க முடியும். அத்துடன் பரிந்துரைக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இதர தகவல்களையும் இதில் பார்க்க முடியும்.

மேலும், அனைத்து வகையான தகவல்களும் இடம்பெறும் ஒற்றை பக்கமாக எக்ஸ்புளோர் ஃபீட் பொதுவான அம்சமாக இருந்து வருகிறது. எனினும் சோதனை வெற்றிபெற்றதும் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு வகையான ஃபீட் அனுபவத்தை பயனாளிகள் எவ்வாறு விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே இந்த சோதனை நடவடிக்கையின் நோக்கமாகவுள்ளது.

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து எவ்வாறான கருத்தை வெளிப்படுத்துகின்றனர் என்பதை தெரிந்துகொள்ளவுள்ளதாக பேஸ்புக் நியூஸ் ஃபீட் தலைவர் அடம் மொசெரி தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்