பதவியை ராஜினாமா செய்கிறார் Samsung Electronics இணை தலைமை நிர்வாக அதிகாரி

Report Print Fathima Fathima in நிறுவனம்

Samsung Electronics நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி Kwon Oh-hyun தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

தொழில்நுட்பத் துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்து வளர்ந்து வரும் நிறுவனம் சாம்சங்.

இந்நிறுவனத்தின் மூன்று இணை தலைமை நிர்வாக அதிகாரிகளில் முக்கியமானவர் Kwon Oh-hyun.

கடந்த 32 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றி வரும் Kwon Oh-hyun பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாம் நெருக்கடியான சூழலில் இருக்கிறோம்.

புதிய தொடக்கத்தை காண வேண்டிய காலம் வந்துவிட்டது, தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சிக்கேற்றவாறு சிறந்து முறையில் பதிலளிக்க இளம் தலைமை அவசியம்.

ஓய்வை பற்றி நீண்ட நாட்களாக சிந்தித்து வந்தேன், இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும் 2018 மார்ச் வரை Kwon Oh-hyun நிர்வாக குழுவில் இருப்பார் என தெரிகிறது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers