12 ரூபாயில் பயணம்: அதிரடி சலுகையை அறிவித்த பிரபல விமான நிறுவனம்

Report Print Raju Raju in நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 12 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தி பயணிகள் விமானத்தில் பயணிக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு மலிவான விலையில் பயண கட்டணத்தை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 12 ரூபாயில் பயணிகள், விமானத்தில் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான், வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும்.

இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை என இரண்டுக்கும் பொருந்தும்.

இதற்கான முன்பதிவு மே 23ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

கடந்த மாதம் இந்நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில், ஸ்பைஸ்ஜெட் 511 ரூபாயில் பயணம் என்ற சலுகை திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments