வயதான காலத்தில் இளமையை மீட்க புதிய முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in சமூகம்

வயது செல்ல செல்ல ஏற்படும் முதிர்வினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் இதுவரை சாதகமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும் இயற்கையான சில பயிற்சிகளை முகத்திற்கு வழங்குவதன் மூலம் தொடர்ச்சியாக இளமையான தோற்றத்தினை பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது செலவு குறைந்ததும், வலியற்றதுமான ஒரு சிகிச்சை முறையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறான பயிற்சிகளை வழங்குதவன் ஊடாக முகத்தினை இளமைத் தோற்றத்தில் பேண முடியும் என அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அதேபோன்று முகத்திற்கான யோகா (Facial Yoga) ஊடாக 20 வாரங்களில் முகத்தில் இளமைத் தோற்றத்தினை வரவழைக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியானாவில் உள்ள நோர்த்வெஸ்டேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாள்தோறும் 30 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபட்டால் தசைகளை இறுகச் செய்து இளைமைத் தோற்றத்தினை வரவழைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்