வியப்பில் ஆழ்த்திய 9 வயது சிறுவன்: அப்படி என்ன செய்துவிட்டான்?

Report Print Raju Raju in சமூகம்

ஒன்பது வயது சிறுவன் ஒருவன் வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவை சேர்ந்தவர் பிரசாத், இவரின் மகன் ஜெயசந்திரா (9), பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் நகர சாலைகளில் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வலம் வரும் சிறுவன் ஜெயசந்திரா இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறான்.

சைக்கிளின் முன்பக்கம் உங்கள் தலைக்கவசத்தை பயன்படுத்தவும் என்ற வாசகத்தை பதாகையில் எழுதி ஜெயசந்திரா மாட்டியுள்ளான்.

ஜெயசந்திராவின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது குறித்து அறிந்த நகர காவல் ஆணையர் கவுதம் சவங் சிறுவனை அழைத்து பாராட்டியதோடு புதுசைக்கிள் ஒன்றை பரிசாகவும் வழங்கியுள்ளார்.

இது குறித்து கவுதம் கூறுகையில், சாலை பாதுகாப்பை உறுதிபடுத்த இது போன்ற விடயங்களில் கூட்டாக ஈடுபடவேண்டும். ஜெயசந்திராவை நாம் முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

ஜெயசந்திரா கூறுகையில், காவல் ஆணையர் எனக்கு சைக்கிள் பரிசளித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

புது சைக்கிளில் சென்று தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை இனி செய்வேன். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் தான் பலர் உயிரிழக்கிறார்கள் என கூறியுள்ளான்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்