வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்த இலங்கை மனிதர்! நாய்களுடன் வாழ்வதால் ஏற்பட்ட நிலை

Report Print Vethu Vethu in சமூகம்

ஹட்டன் - நல்லதண்ணி பகுதியில் நாய்களுடன் வாழ்ந்து வரும் ஏழ்மையான நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபாத வீதியில் புனித யாத்திரை காலங்களின் போது தற்காலிகமாக கடைகளாக நடத்தி செல்லப்படுகின்ற இடங்களில் குறித்த நபர் வாழ்ந்து வருகிறார்.

இந்த நபர் நாய்களுடனே வாழ்ந்து வருகின்ற நிலையில், தனது உணவையும் நாய்களுடன் உண்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீபாத நோக்கி செல்லும் வெளிநாட்டவர்கள் இந்த நபரை மிகவும் ஆர்வத்துடன் கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 2 வருடங்களாக குறித்த பகுதியில் வாழும் அவர் 50 வயதை கடந்த தோற்றத்தில் உள்ளதாகவும், அவர் ஒருவருடனும் உரையாடுவதில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபருக்கு பிரதேச மக்கள் உணவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரால் ஒருவருக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கும் பிரதேச மக்கள், அவரை ஒரு மனநல மருத்துவரிடம் காட்டுவதே சிறந்ததென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்