தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவல்களை அரசாங்கமோ, அப்போலோ வைத்தியசாலை நிர்வாகமோ இன்றும் உறுதிப்படுத்தவில்லை.
எனினும், முதலமைச்சருக்கான சிகிச்சைகள் தொடர்கின்றன என்று அப்போலோ வைத்தியசாலை தரப்பில் தகவல் வருகியாகியிருக்கின்றது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இன்னமும் வெளிவரவில்லை
மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அப்போலோ வைத்தியசாலையின் துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி, ஜெயலலிதாவிற்கு சிகிச்சைகள் தொடர்கிறது' என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது தமிழகம் முழுவதும் பலருக்கு மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீண் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவ இவ்வாறு மொபைல் சேவை முடக்கப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின்றன.