சிறுவர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய மாணவிகள்

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - தெமட்டகொட பகுதியில் ஹய்ரியா மகளிர் பாடசாலை மாணவிகள் இன்று (03) சிறுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரையான பாலர் பாடசாலை மாணவிகள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களாக பாடசாலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் எதிர்வரும் காலங்களில் பல வெற்றிகளை இந்த பாடசாலை தன்னகத்தே கொண்டு விளங்கும் என்று பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் மாணவர்கள் அனைவரும் சிறுவர் தின வாழ்த்துக்களை அனைத்து சிறுவர்களுக்கும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் மாணவர்கள் அவர்களின் திறமைகளையும், ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments