திருகோணமலையில் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக விடுதியொன்று திறந்து வைப்பு

Report Print Dias Dias in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வறிய மாணவர்கள் தங்கியிருந்து படிப்பதற்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் விடுதியொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் பல ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கட்டடம், 50 இலட்சம் ரூபா செலவில் மறு சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை முன்னாள் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர் ச.குகதாசன் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு குறித்த கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

இக்கட்டடத்தை மறு சீரமைத்து விடுதியாக நடத்துவதற்குப் பல அரசியல்வாதிகளிடமும், புலம்பெயர்ந்த பல தனவந்தரிடமும் உதவுமாறு கோரிக்கைகள் விடுத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எமது பாடசாலைக்கு ஏதோ ஓர் அலுவலாக வந்த ச.குகதாசன் இக்கட்டடத்தை மறுசீரமைத்து விடுதியாக நடத்த உதவ முடியுமா ? எனக் கேட்டேன்.அவர் அதற்கு உடன்பட்டு ஒரு மாத காலத்துள் விடுதி திருத்துவதற்கான 50இலட்சம் ரூபாவை கிழக்கு மாகாண அபிவிருத்தி நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார்.

அவருக்கு மாணவர் சார்பிலும், ஆசிரியர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்