அகில இலங்கை பாடல் போட்டியில் முதலிடம் பிடித்த வவுனியா சூசையப்பர் ஆலயம்

Report Print Theesan in சமூகம்

அகில இலங்கை ரீதியிலான கிறிஸ்மஸ் கரோல் தமிழ் பாடல் போட்டியில் வவுனியா புனித சூசையப்பர் ஆலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு றாகம புனித பேருதுவானவர் மற்றும் பவுலடியார் பேராலயத்தில் அண்மையில் அகில இலங்கை ரீதியில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி இடம்பெற்றது.

இதன்போது போட்டியில் பங்குபற்றிய வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய பாடகர் குழாம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் சனோஜன், நிதுஷன், டிலைக்கசன், ஜெறோன், திலோஷன், றொஷானி, சோபிகா, ஜெசிந்தா, ஜெனுஷியா வைலட், சொப்னா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...