தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவி கௌரவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவி வி.ஆசிகாவை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ். பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கிருபா லேணர்ஸின் அனுசரணையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் யாழ். பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள், கிருபா லேணர்ஸ் உரிமையாளர், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை சார் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்