ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் வவுனியாவில் திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஆசிகுளம், ஈஸ்வரிபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை றொட்டறிக் கழகம் மற்றும் லாம் லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜே.பிரதீபன் தலைமையில் ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா நிதி உதவியில் இந்த குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திறப்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.எம்.ஹனீபா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வில்வரட்ணம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிறைசூடி, ஆசிகுளம் கிராம அலுவலர் ஜெனகன், சமுர்த்தி அலுவலகர், நிறுவனத் தலைவர்கள், கிராம அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் இலங்கை றொட்டறிக் கழகம், லாம்ப் லங்கா ஆகியவற்றின் நிதி அனுசரணையில் வெலிஓயா, முள்ளியவளை பொன்நகர், கோவில்குடியிருப்பு, துணுக்காய், சாவகச்சேரி போன்ற பகுதிகளிலும் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்