வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

Report Print Theesan in சமூகம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இதற்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமும், மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையில் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து குறித்த மாற்றுத் திறனாளிகள் விழாவை நடத்தியிருந்தன.

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை, கலாச்சார நிகழ்வுகள் வினாவிடைப் போட்டிகளென பல அரங்கு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதில் மாவட்டச் செயலாளர் ஐ.எம் கனீபா, மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம், வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா, உளநல வைத்தியர், சி.சுதாகரன், என பலரும் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை கௌரவப்படுத்தினர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்