மட்டக்களப்பில் மலர்ந்தது புதிய ஊடக அமையம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக வரலாற்றின் மற்றுமொரு பதிவாக ஊடக அமையம் ஒன்று புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள கட்டிடத்தில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, ஐயாத்துரை நடேசன், தருமரெத்தினம் சிவராம், சு.சுகிர்தராஜன், மயில்வாகனம் நிமலராஜன் போன்றோருக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவுகூறப்பட்டது.

மேற்படி ஊடக அமையத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஊடக சந்திப்புக்கள் அனைத்தும் இடம்பெறும் என்பதை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந், மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், மதத் தலைவர்கள் ஆகியோரினால் மட்டு ஊடக அமையம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட ஊடகவியலாளர்கள், மும்மதத்தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்