இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32வது நினைவு தினம் அனுஸ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32வது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைக்கு இந்திய அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த வேளையில், 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த பணியாளர்கள் 21 பேரை சுட்டுக் கொன்றனர்.

அந்த சம்பவத்தின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எக்ஸ்ரே பிரிவில் நினைவு கூரப்பட்டது.

குறித்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers