வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பறக்க விடப்பட்ட போட்டி புறாக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி இன்று போட்டி புறாக்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து போட்டி போட்டு பறப்பதற்காக பழக்கப்பட்ட புறாக்கள் வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பறக்க விடப்பட்டுள்ளன.

கொழும்பு புறா வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் கோசல பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 280 புறாக்கள் போட்டிக்காக பங்குபற்றியுள்ளது.

வவுனியாவிலிருந்து பறக்கவிடப்படும் இப்புறாக்கள் சுமார் மூன்று மணிநேரத்தில் கொழும்பை சென்றடையும்.

வெற்றிபெறும் மூன்று புறாக்களுக்கு முறையே 25 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபா மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என கொழும்பு புறா வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் கோசல பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்