யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இந் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான ந.கஜன், ப.சுலக்சன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers