கடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய முயற்சி!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் கடற்படை ஏற்பாடு செய்யும் வருடாந்த 'காலி கலந்துரையாடல்' நிகழ்வில் 55 நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு ஒக்டோபர் 21ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதிகளில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

நாடு கடந்த கடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்தல் என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 3 பாதுகாப்பு பிரிவுகள் என்பன பங்கேற்கவுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்