திருகோணமலையில் 1500 மரங்கள் நடும் செயற்திட்டம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மொறவெவ பிரதேசத்தில் 222ஆவது தலைமையக படைப்பிரிவின் ஏற்பாட்டில் 1500 மரங்கள் நடும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டமானது 222ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் விஜேசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

காட்டு வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும், அதன்மூலம் பயன்பெறக்கூடிய வகையிலும் நான்கு ஏற்றல் நிலப்பரப்பில் இந்த மர நடுகை திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மகோக்கனி, தேக்கை, முதிரை, மதுரை, நாவல் மற்றும் பனிச்சை மரங்களும் இதன்போது நாட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள் மற்றும் தலைமைக் காரியாலய கட்டளை தளபதி அருன ஜெயசேகர, 224ஆவது படைப்பிரிவின் தளபதி பிரசன்ன எதிரவீர, படை அதிகாரிகள், சுற்றாடல் வன அதிகாரிகள், படை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்