முல்லைத்தீவில் பாடசாலையின் குறைபாடுகளை சீர்செய்து தருவதாக உறுதி! கைவிடப்பட்டது போராட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, பாரதி மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறித்த பாடசாலையானது ஆசிரியர் பற்றாக்குறையுடனும், அதிபர் மற்றும் பிரதி அதிபர் இன்மை போன்ற பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோரினால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த பாடசாலைக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட வலய கல்வி பணிப்பாளர் உமாநிதி புவனராஜா, பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பினை தற்காலிகமாக சீர்செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், கோட்டக்கல்வி அதிகாரி பாடாசலையில் தற்காலிகமாக அதிபராக பணியாற்றுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்