வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகள்

Report Print Theesan in சமூகம்

உலகலளாவிய ரீதியில் வாழும் இந்துக்களினால் ஆடி அமாவாசை விரதம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக வவுனியா அகிலாண்டேஸ்வரி சமதே அகிலாண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் வவுனியா கந்தசுவாமி ஆலயங்களில் மிகவும் சிறப்பான முறையில் ஆடி அமாவாசை விரதம் இடம்பெற்றிருந்தது.

மேலும், ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்ளும் பக்தர்களினால் தங்களது பிதுர்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அந்தணர்களிற்கு தானமும் வழங்கியிருந்தனர்.

இதேவேளை, ஆடி அமாவாசை விரதம் அனுஸ்டிப்பவர்கள் வவுனியாவில் உள்ள ஏனைய கோயில்களிலும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த ஆடி மஹோற்சவப் பெருவிழாவின் சமுத்திர தீர்த்தம் இன்று மஹோற்சவ குரு சிவஸ்ரீ குமாரசேவற்கொடியோன் குருக்கள் தலைமையில் காரைதீவு சமுத்திரத்தில் நடைபெற்றுள்ளது.


மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்