மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா

Report Print Ashik in சமூகம்

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் பி.ல.இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது என செட்டிக்குளம் பங்குத்தந்தை எஸ்.செபமாலை தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் பங்குத்தந்தையை இன்று காலை தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 26ஆம் திகதி மாலை பங்குத்தந்தை எஸ்.செபமாலை அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து நவ நாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தியாவில் இருந்து வருகை தரும் அருட்தந்தை இக்னேசியஸ் அடிகளாரினால் சிறப்பு வழிபாடுகள் மற்றும் குணமாக்கல் வழிபாடுகள் இடம்பெற உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers