இரண்டாவது நாளாகவும் கல்முனையில் சத்தியாக்கிரகப் போராட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டாவது நாளாகவும் கல்முனையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை - பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மகசின் சிறையில் ஒன்பதாவது நாளாகவும் கனகசபை தேவதாசன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். இவரின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும் இவரை பார்ப்பதற்கு அமைச்சர் மனோ கணேசன் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்