நாவலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா

Report Print Sinan in சமூகம்

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தின் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து விசேட வசந்த மண்டப பூஜையுடன் நாத, கீத, வேத, சங்க, மேள வாத்தியங்கள் முழங்க அரோஹரா கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்பரத்தில் விநாயகப் பெருமானும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சண்முகநாத சுவாமியும் அதி விநோதமாக அலங்கரிக்கப்பட்ட சித்திர தேரில் ஆரோகணித்து சுவாமி உள் வீதி உலாவருதலும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் பக்தியுடன் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலய பரிபாலன சபை ,இந்து இளைஞர் மன்றம், நகர வர்த்தகர்கள், கொடையாளிகளின் ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers