சமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு

Report Print Kumar in சமூகம்

இன நல்லுறவினையும் இனங்களிடையேயான ஒற்றுமையினையும் ஏற்படுத்துவதற்கும் சமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்குமாக மததத்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

குறித்த மாநாடு எகட் ஹரித்தாசின் சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது அண்மையில் ஏற்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான இனங்களிடையேயான நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் தோற்றம் பெறும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை அகற்றி இனங்களிடையே புரிந்துணர்வினையும், பரஸ்பர உறவினையும் கட்டியெழுப்புவதற்கு மதத்தலைவர்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன நல்லுறவினை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு சவாலாகவுள்ள விடயங்களை இனங்கண்டு ஏனைய அமைப்புகளுடன் இணைந்து அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் சம்மேளன தலைவர் சிவஸ்ரீ சிவகுமார குருக்கள் உட்பட இந்துக்குருமார், மௌலவிகள், அருட்தந்தையர்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்